இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் (A...
இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் (ADB)முன்மொழிந்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa-வை சந்தித்த போதே ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கிய அவசர உதவிகளுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.