டுபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் நபர்களை அழைத்துச் சென்று காணாமலாக்கும் ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திண...
டுபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் நபர்களை அழைத்துச் சென்று காணாமலாக்கும் ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் காவற்துறையுடன் இணைந்து விசாரித்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பும் போது அவர்களுக்கு பயிற்சி திட்டங்களை வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, நீதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 6 சட்டமூலங்கள் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளன. இதன்படி, ஆபத்தான மருந்துகள் திருத்தங்கள், நொத்தாரிசு திருத்தங்கள், சட்ட அதிகாரமளித்தல் திருத்தங்கள், ஆவணப் பதிவு திருத்தங்கள், இறுதி உயில் திருத்தங்கள், மோசடி தடுப்பு திருத்தங்கள் ஆகிய திருத்தச் சட்டமூலங்ள் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.