ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப...
ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்ப்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும் லஹிரு குமார 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.