சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் மன்னார் சென் சேவியர்ஸ் கல்லூரிக்கும் இடையிலான (Un 20) இறுதியாட்டம் (25/11/2022) வெள்ளிக்கிழமை கொழும்பு சிற்றி ல...
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் மன்னார் சென் சேவியர்ஸ் கல்லூரிக்கும் இடையிலான (Un 20) இறுதியாட்டம் (25/11/2022) வெள்ளிக்கிழமை கொழும்பு சிற்றி லீக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியின் போது முதல் பாதி ஆட்டத்தில் சென் சென் சேவியர்ஸ் கல்லூரி ஒரு கோலைப் பெற்றது. பிற்பாதி ஆட்டம் விறுவிறுப்பாக மாற சென் பற்றிக்ஸ் கல்லூரி முன் கள வீரர் V. ரோகித் சிறப்பாக விளையாடி ஒரு கோலைப் பெற்றுக் கொடுக்க ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
வெற்றி தோல்வியை தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை (Penalty) வழங்கப்பட்டது. இதில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி 05:04 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அகில இலங்கை பாடசாலைகள் 20 வயதுப்பிரிவில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. இத்தொடரின் காலிறுதிக்கு முந்திய போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி Galle மகிந்தாக் கல்லூரி அணியை 04:00 என்ற கோல் கணக்கிலும் காலிறுதி ஆட்டத்தில் அல் இல்மா முஸ்லீம் கல்லூரியை 04:00 என்ற கோல் கணக்கிலும் அரையிறுதி ஆட்டத்தில் ஏறாவூர் அலிகார் தேசிய முஸ்லீம் கல்லூரியை 02:00 என்ற கோல் கணக்கிலும் வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டி வரை முன்னேறினர்.
சென் பற்றிக்ஸ் கல்லூரியின் முன் கள வீரர் V. ரோகித் இப்போட்டித் தொடரின் மிகச் சிறந்த வீரராக (Most valuable player of the tournament) தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்படடார். சென் பற்றிக்ஸ் கல்லூரி உதைபந்தாட்ட வரலாற்றில் 20 வயதுப் பிரிவில் தேசிய ரீதியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி முதலிடம் (National Champions) பெற்றமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.