இலங்கைக்கான பாகிஸ்தானியத் தூதுவர் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இரு நாள் பயணமாக வடக்கிற்கு வருகை த...
இலங்கைக்கான பாகிஸ்தானியத் தூதுவர் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இரு நாள் பயணமாக வடக்கிற்கு வருகை தந்துள்ள பகிஸ்தானியத் தூதுவர் இன்று மாலை மாநகர சபையில் முதல்வர் மற்றும் ஆணையாளரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதேநேரம் இன்று மாலை யாழில் உள்ள பள்ளிவாசலிற்குச் செல்லும் பாகிஸ்தானியத் தூதுவர் நாளை கீரிமலைக்கும் மன்னாரிற்கும் பயணிக்கின்றார்.