இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இராமேஸ்வம் மாவட்ட மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் ஓர் காரில் எடுத்து வரப...
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இராமேஸ்வம் மாவட்ட மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் ஓர் காரில் எடுத்து வரப்பட்டு இலங்கைக்கு கடத்த முயன்ற சமயம் மரையன் பொலிசாரால் ஒருவகை போதைப் பொருள் பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடத்த முயன்ற போதைப் பொருள் 20 லீற்றர் குடிநீர் கான்களில் அடைக்கப்பட்ட நிலையில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன. இதன்போது 30 கான்களில் நிரப்பப்பட்ட போதைப் பொருட்களை நாட்டுப் படகு மூலமே இலங்கைக்கு கடத்த முற்பட்ட காரின் சாரதி மற்றும் படகோட்டி என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேநேரம் இவ்வாறு கைப்பற்றப்பட்ட குடிநீர் கான்களில் இருந்தவை விவசாய உரம் என கருதியபோதும் இராமேஸ்வரம் மற்றும் மதுரை ஆகிய ஆய்வுகூட பரிசோதணைகளில் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டதனால் இவற்றின் மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.