டயனா கமகே மீதான வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று உத்தரவு பிறப்பித்துள...
டயனா கமகே மீதான வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, டயனா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, பயணத்தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இந்தக் கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதவான் அறிவித்ததுடன், அதுவரை பயணத்தடை நீடிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.