வடக்கு, வட மத்திய, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவ...
வடக்கு, வட மத்திய, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களில் நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் தென் கிழக்கு திசையில் நிலவும் வளிமண்டல குழப்பநிலையானது குறைந்த தாழமுக்க வலயமாக மாற்றமடைந்துள்ளது.
இதனிடையே, மட்டக்களப்பு முதல் திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையிலான கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமெனவும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.