தேசிய கல்வி நிறுவகத்தின் புத்தக கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(18) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமானது. கண்காட்சி நவம...
தேசிய கல்வி நிறுவகத்தின் புத்தக கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(18) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமானது.
கண்காட்சி நவம்பர் 18,19,20 ம் திகதிகளில் காலை 9மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ளது.
வடமாகாண பாடசாலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களத்தினது அனுசரணையுடன் தேசிய கல்வி நிறுவனத்தின் அச்சிடல் மற்றும் வெளியீடுகள் துறையால் கண்காட்சி ஒழுங்குகள் செய்யப்பட்டது.
தேசிய கல்வி நிறுவகத்தின் வெளியீடுகளான ஆசிரிய வளநூல்கள், மேலதிக வாசிப்பு நூல்கள், பயிற்சி நூல்கள், செயற்பாட்டு நூல்கள் போன்றவை குறிப்பாக தமிழ் மொழி மூலம், ஆங்கில மொழி மூலம் நூல்கள் 20 வீத கழிவு விலையில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.