யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட நான்காம் வருட மானவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையே நிலவிய வாய்த்தர்க்கம் முற்றி...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட நான்காம் வருட மானவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையே நிலவிய வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது.
நான்காம் வருட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை முகாமைத்துவ பீடத்தின் முன்பாக அமைந்துள்ள உணவகம் ஒன்றில் வைத்து தாக்கியுள்ளனர்.
முதலாம் வருட மாணவன் காயங்களுக்குள்ளான நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று அதிகாரியிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது