யாழ்.வலி, கிழக்குப் பிரதேசசபை ஆழுகைக்குட்பட்ட கரந்தான் சந்தியில் வெள்ள நீர் செல்லும் மதகினை கடைத் தொகுதி கட்டிடம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் ...
யாழ்.வலி, கிழக்குப் பிரதேசசபை ஆழுகைக்குட்பட்ட கரந்தான் சந்தியில் வெள்ள நீர் செல்லும் மதகினை கடைத் தொகுதி கட்டிடம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் மூடி கட்டிய சம்பவம் தொடர்பில் பிரதேசசபை நடவடிக்கை எடுக்கவுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த கடைத் தொகுதி கட்டிடத்தின் உரிமையாளர் கட்டிடத்தின் முன்பக்கமாக உள்ள நிலத்துக்கு சீமந்தினால் மேடை அமைத்துள்ளார்.
அதனோடு வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான அருகில் காணப்பட்ட வெள்ள நீர் வெளியேறும் மதகினையும் சீமெந்தினால் மூடி அடைத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அப் பகுதி மக்களும்