வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான மின்சாரக் கட்டணமான 27 இலட்சம் ரூபாவை செலுத்துவதற்கு பொதுப் பயன்பாடு...
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான மின்சாரக் கட்டணமான 27 இலட்சம் ரூபாவை செலுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் மத ஸ்தலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, மத வழிபாட்டுத் தலங்களில் சுமார் 50% மின் கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.