யாழ். மாநகர சபையால் முதல்வர் கிண்ண சதுரங்க சுற்றுப்போட்டியினை நடத்தப்படவுள்ளதாக மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். ஊடக அறிக்...
யாழ். மாநகர சபையால் முதல்வர் கிண்ண சதுரங்க சுற்றுப்போட்டியினை நடத்தப்படவுள்ளதாக மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் *கார்த்திகை 12ஆம் திகதி மற்றும்13ஆம் திகதிகளில் காலை 09.00 மணி முதல்* யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சதுரங்க சுற்றுப்போட்டிகள் இடம்பெறவுள்ளன. இப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் வீர வீராங்கனைகளிடமிருந்து விண்ணப்படிவங்கள் யாழ். மாநகர சபையால் கோரப்பட்டுள்ளது.
*விண்ணப்பம் கோரல் அறிவித்தல்*
போட்டிகள் அனைத்தும்
1) 5 முதல் 6 வயதிற்குட்பட்டவர்கள் *, ( under 06 )*
2) 7 முதல் 8 வயதிற்குட்பட்டவர்கள்,( *under 08* )*
3) 9 முதல் 10 வயதிற்குட்பட்டவர்கள், ( *under 10 )*
4) 11 முதல் 12 வயதிற்குட்பட்டவர்கள், ( *under 12 )**
5) 13 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் *,( under 14 )**
6) 15 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள் *, ( under 16 )**
7) 16 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
*( OPEN )*
என ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி பிரிவுகளாக நடைபெறும்.
எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் மாலை 3.00 Pm மணியளவில் நடைபெறும் பரிசில் வழங்கும் நிகழ்வில் ஒவ்வொரு பிரிவிலும் ஆண், பெண் பிரிவில் முதல் இடத்தினை பெறும் வீர வீராங்கனைகளுக்கு அப்பிரிவிற்கான *முதல்வர் கிண்ணம்* வழங்கப்படும்.
இரண்டாம், மூன்றாம் இடங்களினைப் பெறும் வீரர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்படுவதோடு சுற்றுப்போட்டியில் *சுற்றுக்கள் அனைத்திலும்* பங்குபற்றும் அனைவருக்கும் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் *வீரர்கள் பாடசாலை ரீதியாகவோ,சதுரங்க பயிற்சி நிலையங்கள் ஊடாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ* விண்ணப்பிக்க முடியும்.
## தனி ஒருவருக்கான நுழைவுக் கட்டணமாக *500 ரூபா*
யாழ். மாநகரசபையின் செயலாளர் பகுதி மற்றும் யாழ். மாநகர சபை பொது நூலகம், மற்றும் நல்லூர், வண்ணார்பண்ணை, குருநகர் ஆகிய இடங்களில் உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான நூலகங்களில் விண்ணப்பத்தினை பெற்று பூரணப்படுத்தி நுழைவுக் கட்டணமாக
500 ரூபாவை செலுத்தி எதிர்வரும் *10ஆம் திகதி மாலை 4.00 PM மணிக்கு* முன்னர் தமது பதிவினை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
*போட்டி நாள் அன்று எந்த வித பதிவு களும்,எக்காரணங்கள் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.*
மேலதிக தகவல்களை
021-222 1186, 077-0635012 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இப் போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதனுடன் அனுப்பும் ( படிவத்தை print எடுத்தல் வேண்டும்) படிவத்தில் உள்ள விபரங்களினை சரியாக பதிந்து நாளைய தினமே ( *10 11 22 மாலை 4.00 pm ற்கு முன்னர் )* போட்டியாளர் ஒருவருக்கான அனுமதிக் கட்டணம் 500/= ரூபாயுடன் யாழ் மாநாகர சபை செயலாளர் பகுதியில் உடனடியாக ஒப்படைக்கவும்.