அரியாலை "கில்லிகள்" மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டி எதிர்வரும் செப்ரெம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக குறித்த ...
அரியாலை "கில்லிகள்" மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டி எதிர்வரும் செப்ரெம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக குறித்த சுற்றுப்போடியின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த ஏற்பாட்டுக்குழு மேலும் கூறுகையில் -
கிராமத்து வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரவும் அதற்கான அங்கீகாரத்தை கொடுக்கும் வகையிலும் வருடா வருடம் நடத்தப்படும் நோக்குடன் கடந்த வருடம் குறித்த சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
9 வீரர்கள் களமிறங்கும் 6 பந்துப் பரிமாற்றங்களை கொண்ட போடியான குறித்த தொடரில் ஏலத்தின் மூலம் வீரர்கள் உள்வாங்கப்பட்டு நடத்தபடும் போட்டியில் இம்முறை
அரியாலை,கொழும்புத்துறை, ஈச்சமோட்டை,மணியம்தோட்டம், பாசையூர் சுண்டுக்குளி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 10 அணிகள் பங்குபற்றுகின்றன.
குறித்த போட்டியானது எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் அரியாலையில் இடம்பெறவுள்ளது.
கிரிக்கெற் விதிமுறைகளுக்கு அமைய நடத்த்ப்படவுள்ள குறித்த போட்டியில் முதல் மூன்றிடங்களை பெறும் அணிகளுக்கு முறையே 150 ஆயிரம், 80 ஆயிரம், 30 ஆயிரம் பணப் பரிசில்களுடன்
வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பஅவுள்ளதாகவும் குறித்த குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது