மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் முன்னோடி பதக்கத்தினை இவ்வருடம் யாழ் மாணவிகள் அதிகளவில் தம் வசபடுத்தி சாதனை படைத்தனர் சுற்றாடல் முன...
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் முன்னோடி பதக்கத்தினை இவ்வருடம் யாழ் மாணவிகள் அதிகளவில் தம் வசபடுத்தி சாதனை படைத்தனர்
சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதக்கம் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் 2023 2022மற்றும் 2024 ஆம் ஆண்டு பதக்கங்களை பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி அனுர குமார் திசாநாயக்கவினால் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள்,சிறந்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர் .
இதன் பொழுது யாழ் மாவட்டத்தினை சேர்ந்த 14மாணவர்கள் பதக்கங்களை பெற்று கொண்டனர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியினை சேர்ந்த 1 மாணவியும் ,வட்டு இந்து கல்லூரியினை சேர்ந்த 4 மாணவிகளும் யா மானிப்பாய் மகளீர் கல்லூரியில் 2 மாணவிகளும் ,யாழ் அத்தியார் இந்து கல்லூரியில் 3 மாணவர்களும் யா பெரிய புலம் மாகவித்தியாலயத்தில் 1 மாணவியும் யா வேம்படி மகளீர் கல்லூரியில் 1மாணவியும் யாழ்ப்பாணம் மகளீர் கல்லூரியில் 1 மாணவியும் சாவகச்சேரி மகளீர் கல்லூரியில் 1 மாணவியும் என 14 மாணவிகள் பதக்கங்களை பெற்று கொண்டனர்.
இதேவேளை அதிகளவான சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி விருது பதக்கங்களை மாணவர்கள் பெற நெறிபடுத்திய யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர் திருமதி திருச்செல்வி சிவானந்தனும் கௌரவிக்கப்பட்டார்.
மாணவர்களை சிறு பராயம் முதல் சுற்றாடல் நேயமுள்ளவர்களாக உருவாக்குவது இந்த விருதின் நோக்கமாகும் ..



.jpeg)

