நேபாளத்தில் இன்று (நவ.09) நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவிக்கின்றது. இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவ...
நேபாளத்தில் இன்று (நவ.09) நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவிக்கின்றது.
இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தினால் வீடொன்று உடைந்து வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கம் இந்திய தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தினால் இந்தியாவில் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டு, நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் சுமார் 9,000 பேர் உயிரிழந்திருந்தனர்.
வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.