கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் குளிரால் 14 வாழ்வாதார மாடுகள் பலியாகியதுடன், ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றார...
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் குளிரால் 14 வாழ்வாதார மாடுகள் பலியாகியதுடன், ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றார்.
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்தின் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தும், உயிருக்காக போராடியும் வருகிறது.
நாட்டில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்படும் பாதிப்பில் அகப்பட்டு உயிரிழந்த கால்நடைகள் தவிர்ந்த ஏனைய கால்நடைகளை மீட்டு அருகில் தீ மூட்டி உயிரை பாதுகாக்க பண்ணையாளரும், அயலவர்களும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.