யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட எல்லைப் பரப்பிற்குள் உள்ள 32 குளங்களின் ஆவணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் உறுப்பினர் ந.லோகதயாளன் கையளி...
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட எல்லைப் பரப்பிற்குள் உள்ள 32 குளங்களின் ஆவணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் உறுப்பினர் ந.லோகதயாளன் கையளித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட எல்லைப் பரப்பிற்குள் உள்ள குளங்கள் யாருக்கு சொந்தம் எனவும் அவை மாநகர சபைக்குத்தான் சொந்தமானால் அவற்றின் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் ஆளுநரால் மாநகர சபை மற்றும. பிரதேச செயலாளர்களிடம் எழுத்தில் கோரியிருந்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் உள்ள ஆரியகுளத்தின் நடுவே தியான மண்டபம் அமைக்குமாறு ஆளுநர் தெரிவித்த கருத்தை சபை நிராகரித்தபோதே ஆளுநர் உரிமை ஆவணத்தை கோரியிருந்தார்.
இதற்கமைய குளங்கள் தொடர்பான ஆவணங்கள் பல கிடைத்தபோதும் 1938 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆளுநரால் மாநகர சபைக்கு ( அப்போதைய நகர சபை) பாரதீனப்படுத்தி அதனை மாவட்டச் செயலக தோம்பில் பதிவு செய்த ஆவணம் சிக்கவில்லை.