உற்பத்திச் செலவுகளுக்கு அமைய, வெள்ளை முட்டை 49 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை 50 ரூபாய்க்கும் எல்லை விலையை வழங்குமாறு கோரியதாக அகில இலங்கை முட...
உற்பத்திச் செலவுகளுக்கு அமைய, வெள்ளை முட்டை 49 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை 50 ரூபாய்க்கும் எல்லை விலையை வழங்குமாறு கோரியதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்தார்.
அதாவது, தற்காலிகமாக 55 ரூபா என்ற விலை எல்லையை வழங்குமாறு கோருகின்றோம் என்றார்.
உற்பத்தி கிடைக்கும்போது, எதிர்காலத்தில் இந்த விலை குறைவடையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்தார்.
இதேவேளை, முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், அது தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.