உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கான திகதியை எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்...
உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கான திகதியை எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தலை நடத்துவதற்கான தளவாட தேவைகளை வகுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இந்நிலையில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை விரைந்து வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மாசி மாதம் இறுதியாக உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெற்ற நிலையில் அடுத்த வருடம் பங்குனி 20 ஆம் திகதிக்குள் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.