மண்டூஸ் சூறாவளி காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக குறைந்தது 2 பேர் இறந்துள்ளனர், 9 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 4...
மண்டூஸ் சூறாவளி காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக குறைந்தது 2 பேர் இறந்துள்ளனர், 9 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 4,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலைய அறிக்கையின்படி, மோசமான வானிலை காரணமாக 1302 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சுமார் 58 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.