இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்டன் தம்மிட...
இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்டன் தம்மிடம் தெரிவித்ததாக யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
நேற்றைய புதன் கிழமை யாழ்.மாநகரசபையில் மாநகர முதல்வருக்கும் பிரித்தானிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தூதுவருடைய சந்திப்பு மிகவும் பயனுள்ள சந்திப்பாக அமைந்த நிலையில் தமிழ் மக்களுடைய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அவரிடம் வெளிப்படையாக பேசினேன். இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தாது காலம் கடத்துவது பற்றி அவரிடம் பேசினேன்.
அரசாங்கம் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் தமக்கும் நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியா காரைக்கால் கப்பல் சேவை ஆகியன திட்டமிடப்பட்ட இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தமிழ் மக்களினுடைய பூர்வீக நிலங்கள் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிப்பு நடைபெற்றுவருகின்றமை தொடர்பில் அவரிடம் எடுத்து கூறினேன். அவர் ஒரு கோரிக்கையை என்னிடம் விடுத்தார் இங்கிலாந்துக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான
இருதரப்பு நகர ஒப்பந்தங்களை செய்ய தாங்கள் ஆர்வமாக இருப்பதாக கூறினார். நான் அவரிடம் கூறினேன் ஏற்கனவே இரு நகர ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு நிலையில் இலங்கை அரசாங்கம் அதனை இடைநிறுத்தி வைத்திருப்பதாக அவரிடம் கூறினேன்.
சகல விடயங்களையும் கேட்டறிந்தார் தூதுவர் அது தொடர்பில் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதாக தெரிவித்துச் சென்றதாக முதல்வர் மேலும் தெரிவித்தார்.