ADVERTISEMENTஇந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் சுற்றுப் பய...
ADVERTISEMENTஇந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் அணித் தலைவராக தசுன் ஷானக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சுற்றுப் பயணத்தில் இரண்டு உபத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இதன்படி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான உபத் தலைவராக குசல் மென்டீஸ் மற்றும் இருபதுக்கு இருபது தொடருக்கான உபத் தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பானுக்க ராஜபக்ஸ மற்றும் நுவன் துஷார ஆகியோர் மூன்று போட்டி தொடரை கொண்ட, இருபதுக்கு இருபது போட்டிகளுக்காக மாத்திரம் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, ஜெப்ரி வென்டஷன் மற்றும் நுவனிந்து பெர்ணான்டோ ஆகியோர், ஒரு நாள் போட்டிகளுக்காக மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.