யாழ்ப்பாணக் கடலில் தத்தளித்த ரோகிங்கியர்களிற்கு வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் அனுசரனையில் மருத்துவப் பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்ட...
யாழ்ப்பாணக் கடலில் தத்தளித்த ரோகிங்கியர்களிற்கு வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் அனுசரனையில் மருத்துவப் பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
பங்களாதேசில் இருந்து இந்தோனேசியாவிற்கு படகில் சென்ற சமயம் யாழ்ப்பாணம் கடற்பரப்பில் தத்தளித்த சமயம் டிசம்பர் 17 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட ரோகிங்கியர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் நீண்ட நாட்கள் படகில் பயணித்தமையால் தோல் நோய்கள் ஒவ்வாமை ஏறபட்டு கடி சிரங்கு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் பிரகாரம் இவர்களின் மருத்துவ தேவைக்காக ஒரு தொகுதி மருத்துவப் பொருட்கள் சிறைச்சாலை மருத்துவரிடம் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனின் ஏற்பாட்டில் இந்த மருத்துவப் பொருட்களை வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பினால் வழங்கப்பட்டது.
படகில் மீட்கப்பட்ட 105 பேரில் அதிகமானோர் சிறுவர்களாகவும் பெண்களாகவும் காணப்படுவதோடு சில முதியவர்களும் உள்ள நிலையில் அனைவருமே குறித்த தொற்றிற்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.