முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில், தனியார் காணி ஒன்றில், தமிழீழ விடுதலைப...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில், தனியார் காணி ஒன்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சயனட் மற்றும் இலக்கத்தகடு உள்ளடங்கலாக, மனித எச்சங்கள், நேற்று மீட்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில், தனியார் ஒருவரின் காணியை பண்படுத்தும் போது, கடந்த 20 ஆம் திகதி, மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன. அதன் பின்னர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தினால், நீதிமன்றில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற
நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில், சட்ட வைத்திய அதிகாரி றொகான், தடயவியல் பொலிசார், பொலிசார் ஆகியோரால், அகழ்வு இடம்பெற்றது. இதன் போது, மூன்று வகையான மனித எச்சங்களின் மாதிரிகள் மீட்கப்பட்டுள்ளதாக, சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். மனித எச்சங்களுடன், துப்பாக்கி ரவைகள் மற்றும் உடைகள் என்பன காணப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சயனட் மற்றும் இலக்கத்தகடு என்பனவும், குறித்த பகுதியில் இருந்து மீட்னப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில், மரபணு பரிசோதனையின் பின்னர், நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, நீதிபதி பணித்துள்ளார்.