யாழ்ப்பாணக் கடலில் தத்தளித்த 105 பேரில் 104 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு ஒருவருக்கு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப...
யாழ்ப்பாணக் கடலில் தத்தளித்த 105 பேரில் 104 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு ஒருவருக்கு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த சமயம் கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட 105 ரோகிங்கியர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 104 பேர் நேற்று இரவு யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
பர்மாவில் இருந்து விரட்டப்பட்ட ரோகிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில்
படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து 3 வாரங்களாக நடுக் கடலில் தத்தளித்தபோது நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.
இதேநேரம் படகில் பயணித்த 105 பேரில் 104 பேர் யாழ்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட அதேநேரம் இந்த 104 பேரில் படகு உரிமையாளரான முகமது உசைனை எதிர்வரும் 2023-01-02 வரை விளக்க மறியளில் வைக்க மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேநேரம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட ரோகிங்கியர்களில் படகோட்டி தவிர்ந்த ஏனையோர் இன்று அல்லது நாளை மீரியானைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.