எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்படும் விசேட திருப்பலி ஒப்புக்கொடுத்தல் ஆராதனைகளின் போது, தேவாலயங்களுக்...
எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்படும் விசேட திருப்பலி ஒப்புக்கொடுத்தல் ஆராதனைகளின் போது, தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்புக்களை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் உள்ள அருட்தந்தைகளை சந்தித்து, கலந்துரையாடல்களை நடத்தி, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு, பொலிஸ் மாஅதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதேபோன்று, நத்தார் காலப் பகுதியில் தேவாலயங்களில் உள்ளவர்களின் ஒத்துழைப்புடன், தேவாலயத்திற்கு வருகைத் தரும் சந்தேகத்திற்கிடமானோரை அடையாளம் காணப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மேல் மாகாணத்திலுள்ள மிக முக்கியமான தேவாலயங்களுக்கு வெளி மாவட்டங்களிலுள்ள பாதுகாப்பு அதிகாரிகளையும் அழைத்து வந்து, கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.