ஈழத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாலைநிலம் திரைப்படம் சனிக்கிழமை(03) வெளியாகவுள்ள நிலையில் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டுமென படக்குழுவினர் கோரிக்கை...
ஈழத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாலைநிலம் திரைப்படம் சனிக்கிழமை(03) வெளியாகவுள்ள நிலையில் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டுமென படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூட் சுகியின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் தாயக மண் வாசனையுடன் உருவாகியுள்ள “பாலைநிலம்” திரைப்படம் நாளை (03) மாலை 6.30 மணிக்கு யாழ். ராஜா திரையரங்கில் சிறப்புக்காட்சியும், மறுநாள் (4ஆம் திகதி) 03 காட்சிகளும் திரையிடப்படவுள்ளன. காலை 10.30, மதியம் 2.30 மற்றும் இரவு 6.30 காட்சிகளாக இவை திரையிடப்படவுள்ளன.
எனவே, சினிமா ரசிகர்கள் பெருமளவில் வந்து திரையரங்கில் இத்திரைப்படத்தை கண்டு களித்து படத்தை ஆதரிக்க வேண்டும்.
“பாலை நிலம்” திரைப்படத்தில் ரத்னகாந்தன், அபர்ணா, ராஜா மகேந்திரசிங்கம், மகாலிங்கம், விமல் ரோய், ஷாஜா, லச்சா, விமலரூபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்தத்திரைப்படத்திற்கான இசை பிரசாந்த் கிருஷ்ணபிள்ளை. படத்தொகுப்பு நிவேன், கிராபிக்ஸ் தங்கவேல் சிவநேசன் மேற்கொண்டுள்ளனர்.