வடக்கு மாகாணம் உட்பட நான்கு மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்களை விரைவில் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்ட...
வடக்கு மாகாணம் உட்பட நான்கு மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்களை விரைவில் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக நியமிக்கப்படவுள்ள நான்கு ஆளுநர்களில் முன்னாள் அமைச்சர்களும் அடங்குகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர்கள் ஆளுநர்களாக
அதேசமயம் 9 மாகாணங்களில் ஏனைய 5 மாகாண ஆளுநர் பதவிகளில் எந்த மாற்றங்களையும் செய்வதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய நான்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்படவுள்ள புதிய ஆளுநர்களின் பெயர் விவரங்கள் இதுவரை வெளியாகத நிலையில் , அவற்றிற்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படலாம் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.