இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களின் வலைகளை இலங்கை மீனவர்கள் அறுத்து எடுத்து சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளத...
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களின் வலைகளை இலங்கை மீனவர்கள் அறுத்து எடுத்து சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,இந்திய மீனவர்கள் நேற்று(28) நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என தெரிவித்ததுடன் இந்திய மீனவர்கள் விரித்து இருந்த வலைகளை அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வலையை வெட்டிச் சென்றவர்களை துரத்தி சென்ற போது இந்திய மீனவர்களுடைய படகின் இயந்திர கோளாறு காரணமாக வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில் தஞ்சமடைந்தனர்.
தஞ்சமடைந்துள்ள இந்திய மீனவர்களிடம் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் தஞ்சமடைந்தவர்களை இந்தியாவிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.