வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப்படிமத்தினால், எதிர்வரும் சில தினங்களுக்கு முகக்கவசம் அணியுமாறு, சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய...
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப்படிமத்தினால், எதிர்வரும் சில தினங்களுக்கு முகக்கவசம் அணியுமாறு, சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் டொக்டர் அனில் ஜாசிங்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள், இன்றைய நாளில், பெரும்பாலும் குறைவடைந்து செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி நகரும் காற்றின் மாசு அளவு, படிப்படியாக குறைவடையும் என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.