இந்தியாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின...
இந்தியாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (14) பதவியேற்றுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவிப்பிரமாணம் செய்தார்.
“தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற முயற்சிப்பேன். அமைச்சராக முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன். மாமன்னன் தான் நடிகராக எனது கடைசி திரைப்படம். இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியாது, செயல்பாடுகள் மூலமே பதிலளிக்க முடியும் என உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.