நாளை(31) மற்றும் நாளை மறுதினம்(01) மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எனினும், எதி...
நாளை(31) மற்றும் நாளை மறுதினம்(01) மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை(02) நாடளாவிய ரீதியில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.