எதிர்காலத்தில் மின்வெட்டு நீடிக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவும் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பில் நே...
எதிர்காலத்தில் மின்வெட்டு நீடிக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை இதுவரையில் கோரிக்கை விடுக்கவில்லை என தெரிவித்தார்.
இதேவேளை, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு அவசியமான நிலக்கரி கிடைக்காமையால், அடுத்த வாரத்தின் பின்னர், மின் துண்டிப்பு, 10 மணித்தியாலங்களுக்கு நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலக்கரி கிடைக்காமையினால், 300 மெகாவோட் மின்சாரம், தேசிய மின் கட்டமைப்புக்கு கிடைக்காமல் போகும் என கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் அந்தச் சங்கத்தின் உப தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.