யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்ற...
யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று (சனிக்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, வாள் வெட்டு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.