வடக்கு மாகாண ஆளுநரால் சட்ட முரணாக வெளியிட்ட வர்த்தமானியை இரத்தச் செய்யுமாறு நீதியமைச்சருக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழ் பத்...
வடக்கு மாகாண ஆளுநரால் சட்ட முரணாக வெளியிட்ட வர்த்தமானியை இரத்தச் செய்யுமாறு நீதியமைச்சருக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த செய்தியில்,வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா 2022-10-27 அன்று இரு நியதிச் சட்டங்களை உருவாக்கி அவற்றை வர்த்தமானியில் பிரசுரித்திருந்தார்.
இதனை தவறு எனச் சுட்டிக் காட்டி வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா அறிக்கை விட்ட அதேநேரம் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் திங்கட்கிழமை(05) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட சமயம் வடக்கு ஆளுநரால் 2022-10-27 அன்று வெளியிட்ட இரு வர்த்தமானியினையும் உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராயபக்சாவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பணிப்புரை விடுத்தார்.