இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக சீனாவினால் உத்தியோகபூர்வ சீருடை துணிகள் வழங்கப்படவுள்ளன. சுமார் 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான...
இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக சீனாவினால் உத்தியோகபூர்வ சீருடை துணிகள் வழங்கப்படவுள்ளன.
சுமார் 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான பாடசாலை சீருடையே வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவினால் வழங்கப்படவுள்ள பாடசாலை சீருடைத் துணிகள் இலங்கையின் 70 சதவீத சீருடைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என அந்த தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ சீருடை துணிகள் அடங்கிய முதல் தொகுதி எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
20 கொள்கலன்களில் குறித்த பாடசாலை சீருடை துணிகள் நாட்டை வந்தடையவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.