யாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவுச்சீட்டு விலை ஒப்பீட்டளவில் அதிகமானது என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் பொருளாதா...
யாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவுச்சீட்டு விலை ஒப்பீட்டளவில் அதிகமானது என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கருத்திற்க்கொண்டு அதனை வாங்கியதாக தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாணக்கோட்டையில் சீன நாட்டுடன் தொடர்புடைய ஒரு பொருள் ஒன்றை பார்த்தேன். இதன் மூலம் சீனாவுடனான தொடர்பு பழமையானது என்றார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் புதன்கிழமை விஜயம் செய்து பார்வையிட்டனர்.
யாழ்ப்பாணம் கோட்டையில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 20 ரூபாய் பணமும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 4 அமெரிக்க டொலர் பணமும் வசூலிக்கப்பட்டு வருகின்றது.