மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்திட்டத்தின் நிறைவு தினத்தை முன்னிட்டு சர்வதேச மனித உரிமை...
மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்திட்டத்தின் நிறைவு தினத்தை முன்னிட்டு சர்வதேச மனித உரிமைகள் தினமான சனிக்கிழமை(10) விசேட நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
டான் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் மாலினி அஜந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கலந்து கொண்டதுடன் கருத்துரைகளும் இடம்பெற்றது.