யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திர சிகிச்சைத் துறையும் பெண்நோயியல் மற்றும் மகப்பேற்றுத் துறையும் இணைந்து நடத்தும் கருவுறுதல் பற...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திர சிகிச்சைத் துறையும் பெண்நோயியல் மற்றும் மகப்பேற்றுத் துறையும் இணைந்து நடத்தும் கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு தினமும் நூல் வெளியீடும் இன்றையதினம் நடைபெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, மருத்துவ பீட பீடாதிபதி ரா.சுரேந்திரகுமாரன், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள்,மருத்துவர்கள், விரிவுரையாளர்கள், ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
வைத்தியர் பா. பாலகோபியுடன் இணைந்து வைத்தியர் சி.இரகுராமன் “குழந்தையின்மை விளக்கங்களும் தீர்வுகளும்” என்ற நூலை எழுதியுள்ளார்.
குழந்தையின்மை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள இந்நிகழ்வு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.