வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்...
வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் குறித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில் 302 இலங்கையர்களில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.