யாழிலிருந்து புறப்பட்ட மியான்மார் அகதிகள். போக்குவரத்து ஏற்பாடுகள் ஆளுநரின் கண்காணிப்பில். கடந்த வாரம் வெற்றிலைக்கோணியை அண்மித்த கடற்கரப்பில...
யாழிலிருந்து புறப்பட்ட மியான்மார் அகதிகள். போக்குவரத்து ஏற்பாடுகள் ஆளுநரின் கண்காணிப்பில்.
கடந்த வாரம் வெற்றிலைக்கோணியை அண்மித்த கடற்கரப்பில் வைத்து கடற்படையால் அழைத்து வரப்பட்ட மியான்மார் நாட்டு அகதிகள் இன்று வியாழக்கிழமை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் ஒழுங்குபடுத்தலில் இன்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் யாழ் சிறைச்சாலையில் இருந்து மூன்று பேருந்துகள் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியுடன் நீர் கொழும்புக்கு புறப்பட உள்ளனர்.
பங்களாதேஷில் இருந்து இந்தோனேசியா நோக்கி செல்ல தயாராக இருந்த நிலையில் படகு பழுதடைந்து தத்தளித்த நிலையில் வெற்றிலை கேணி கடற்பரப்பை அன்மித்த கடற் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் படகு ஓட்டி உற்பட சுமார் 105 பேர் காப்பாற்றப்பட்டனர்.
குறித்த அகதிகள் மியன்மாரில் இருந்து பங்களாதேசில் தங்கி இருந்த முஸ்லிம்கள் என அறியக் கிடைக்கும் நிலையில் இந்தோனேசியா நோக்கி கடல் வழியாக செல்ல தயாராக இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்கள் காங்கேசன் துறை முகத்தில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கான உணவு மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில் இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்
இன் நிலையில் பொலிசார் கடந்த திங்கட்கிழமை இரவு உரிய ஏற்பாடுகள் இன்றி இரு பேருந்துகளில் அகதிகளை நீர் கொழும்புக்கு அனுப்பி வைக்க தயாராக இருந்த நிலையில் உயர் மட்டத் தலையீட்டால் யாழ் சிறைச்சாலையில் அவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயவின் நேரடி கண்காணிப்பில் வட மாகாண அமைச்சுகளின் மூன்று பேருந்துகளில் குறித்த அகதிகளை இட நெருக்கடி இன்றி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பவுள்ளனர்.