அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதில் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி, ப...
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இதில் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர் உள்ளிட்டவர்களுடன், சட்டமா அதிபரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், பேச்சாளர் எம். ஏ. சுமந்திரனும் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பாக ஜனவரி மாதம் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஓரிரு வாரங்களுள் முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.