எதிர்வரும் தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவது தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று கூடி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டன. தமிழ் மக்கள் கூட்டணியி...
எதிர்வரும் தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவது தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று கூடி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டன.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதைல முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா மற்றும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கூடி இவ்வாறு கலந்துரையாடியுள்ளனர்.