தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவு ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டது எது என்றால் அது 'பிக்பாஸ்...
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவு ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டது எது என்றால் அது 'பிக்பாஸ்' தான்.
இந்த நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 6ஆவது சீசன் விறுவிறுப்பாகவும், பரபரப்பிற்கு பஞ்சமில்லாமலும் ஓடிக்கொண்டு வருகின்றது.
அந்தவகையில் 21 பேருடன் ஆரம்பமாகி 60 நாட்களை கடந்து கண்ணீருடனும், சிரிப்புடனும் செல்லும் இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் ஒருவர் வெளியேறிய வண்ணம் தான் இருக்கின்றனர்.
மேலும் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து இருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை ராம் வெளியேறி இருந்தார்.
இதேவேளை இன்றைய தினம் யார் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய 3ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் "இந்த வீட்டில் லக்கினால் பிழைத்துக் கொண்டு வருபவர் யார்" எனக் கமல் கேட்கின்றார்.
அதற்கு adk ஜனனியைக் கூறுகின்றார். அதேபோன்று ரச்சிதாவும் ஜனனியையே கூறுகின்றார். அதேபோன்று ஜனனி ரச்சிதாவை கூறுகின்றார்.
அதற்கு கமல்" நீங்க நாங்க எல்லாருமே கடின உழைப்பினால் தான் ஜெயிச்சிட்டு இருக்கோம், ரச்சிதா லக்கினால் ஜெயிச்சிட்டு இருக்காங்க என்று கூறுகின்றீர்களே, உங்க கழுத்திலேயும் ஒரு லக் கயிறு தொங்குகின்றதே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்" எனக் கேட்கின்றார். அதற்கு ஜனனி பதில் கூற முடியாது முழிக்கின்றார்.