முல்லைத்தீவு மாவட்டத்தில் காடுகளில் வாழும் அரியவகை மிருகங்களில் ஒன்றான அழுங்கினை இறைச்சிக்காக பிடித்து சென்றவரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் காடுகளில் வாழும் அரியவகை மிருகங்களில் ஒன்றான அழுங்கினை இறைச்சிக்காக பிடித்து சென்றவரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கைதுசெய்தனர்.
வெள்ளிக்கிழமை(16) துணுக்காய் தேராங்கண்டல் பகுதியில் இறைச்சிக்கு பயன்படுத்த இருந்த நிலையில் இருந்த ஆமடில்லா (அழுங்கு) என்றழைக்கப்படும் காட்டு விலங்கினை இறைச்சிக்காக பிடித்து சென்றவரை கைதுசெய்த கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஆமடில்லாவை (அழுங்கு) உயிருடன் மீட்டனர்.
">கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சந்தேக நபர் ஒருவரின் வீட்டை பரிசோதனை மேற்கொண்ட போது குறித்த காட்டு விலங்கு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.இதேவேளை கைதான சந்தேக நபரையும் விலங்கினையும் சனிக்கிழமை(17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.