சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கிண்ணியா அல் அக்ஷா கல்லூரிக்கும் இடையிலான மூன்றாம் இடத்துக்கான ஆட்டம் (13/12/2022) செவ்வாய் கிழமை கொழும்பு சுக...
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கிண்ணியா அல் அக்ஷா கல்லூரிக்கும் இடையிலான மூன்றாம் இடத்துக்கான ஆட்டம் (13/12/2022) செவ்வாய் கிழமை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் காலை 10:30 மணிக்கு நடைபெற்றது இப் போட்டியின் போது முற்பாதி ஆட்டத்தின் போது சென் பற்றிக்ஸ் கல்லூரி 03 கோல்களையும் பிற்பாதி ஆட்டத்தின் போது 02 கோல்களையும் பெற்று எல்லாமாக 05:00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இதில் A J ஜெறோம் - 02 A லியோ -01. V றோகித்-01. S சைனுஜன்-1 ஆகியோர் கோல்களைப் பெற்றுக் கொடுத்ததனர். இப் போட்டித் தொடரின் போது A J ஜெறோம் தான் விளையாடிய போட்டிகளில் எல்லாமாக 12 கோல்களைப் பெற்றுக்கொடுத்து அதி கூடிய கோல்களைப் பெற்றுக் கொடுத்த வீரருக்கான தங்க காலணி ( Top goal scorer in the tournament) விருதினையும் , 07 போட்டிகளின் போது 05 போட்டிகளில் கோல்கள் எதளையும் எதிரணியினர் பெற விடாது சிறப்பாக கோல்தடுப்பினை மேற் கொண்டு சிறந்த கோல் காப்பாளருக்கான தங்க கையுறை ( Golden glow ) விருதினை A Arnold உம் பெற்றுக் கொண்டனர்.