பாடசாலைகள் தேசிய மட்ட உதைபந்தாட்டத்தில் சாதனை படைத்த சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியினர் கல்லூரி சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர். பாடசாலைகள் மட...
பாடசாலைகள் தேசிய மட்ட உதைபந்தாட்டத்தில் சாதனை படைத்த சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியினர் கல்லூரி சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலைகள் மட்ட உதைபந்தாட்டத்தில் தேசிய ரீதியில் முதலாமிடத்தையும் ThePapare கிண்ண உதைபந்தாட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட சென் பற்றிக்ஸ் கல்லூரி 20 வயது உதைபந்தாட்ட. அணியினரை கௌரவப் படுத்தும் நிகழ்வு 22/12/2022 வியாழக் கிழமை கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் அதிபர் அருட்திரு A .P திருமகன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வெற்றி பெற்ற வீரர்களும் பெற்றோரும் மாலை அணிவித்து பாண்ட் வாத்தியம் முழங்க கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டனர் . இந் நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் P.J.ஜெபரட்ணம் அடிகளார் , கரிதாஸ் - கியூடெக் இயக்குனர் E.இயூஜின் அடிகளார், யாழ்ப்பாண பிரதேச செயலர் திரு S.சுதர்சன், வடமாகாண உடற்கல்விப் பணிப்பாளர் இராஜசீலன். யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக் தலைவர் E.ஆர்னோல்ட், கல்லூரி சிட்னி பழைய மாணவர் சங்க செயலாளர் திரு ரைட்டஸ் அவர்களும் பாரியாரும் மற்றும் யாழ்ப்பாண கல்வி வலய உடற் கல்விப் பணிப்பாளர் திரு சாரங்கன் அவர்களும் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர் மதிப்பளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களால் பாராட்டுரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் கல்லூரி உதைபந்தாட்ட அணி வீரர்களுக்கு உதைபந்தாட்ட காலணிகளும் காலுறைகளும் பணப் பரிசில்களும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.