யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வீடுடைத்து திருட முற்பட்ட திருடனை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சாவகச்சேரி வடக்கு...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வீடுடைத்து திருட முற்பட்ட திருடனை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்களற்ற நேரம், வீட்டின் கதவினை இன்றைய தினம் புதன்கிழமை உடைத்து திருட முற்பட்ட வேளை சத்தம் கேட்டு அயலவர்கள் கூடி திருடனை மடக்கி பிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்து மடக்கி பிடிக்கப்பட்ட சந்தேக நபரை பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.