லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற 12 ஆவது போட்டியில் Colombo Stars அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ள...
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற 12 ஆவது போட்டியில் Colombo Stars அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அசாத் ஷபிக் 58 ஓட்டங்களையும், தாருக்க தாபரே 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் நவீன்-உல்-ஹக் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
அதன்படி, 194 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Stars 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பில் தினேஸ் சந்திமால் அதிகபட்சமாக 63 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
சரித் அசலங்க 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
ரவி பெபாரா ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் நுவன் துஷார மற்றும் அன்வர் அலி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.